'அரசு திட்டங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் விளம்பரம் சேர்க்க தேசத்தின் மரியாதைக்குரிய ராணுவத்தை பாஜக பயன்படுத்துவது சட்டவிரோதமானது; ராணுவத்தை பலவீனப்படுத்தி அதற்கு அவமரியாதை சேர்க்கக்கூடியது’ என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் படைவீரர் துறை தலைவரான ஓய்வு பெற்ற கர்னல் ரோஹித் சவுத்ரி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் புதிய நடவடிக்கையானது, ஒருவகையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதமானது என்று சாடியுள்ளார்.
"பாதுகாப்புத் துறை வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கை, அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பாக 822 செல்பி பாயிண்டுகளை அமைக்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. நம் நாட்டு வீரர்கள் இனி பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் பிரச்சாரம் செய்யப் போகிறார்களா? ராணுவத்தின் அந்தஸ்தை இந்தளவுக்கா தாழ்த்துவது? மிகவும் கடினமான சூழலில் நாட்டின் எல்லையில் காவல் நிற்கும் ராணுவ வீரர்களை, மோடி அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தச் சொல்வதா?” என்று ரோஹித் சவுத்ரி குமுறி உள்ளார்.
”பாஜக அரசு செய்வது சட்ட விரோதம். எனவேதான் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவை அரசின் இந்த உத்தரவை தங்கள் இணையதளங்களில் வெளியிடவில்லை” என்றும் அவர் ஒரு விளக்கம் தந்துள்ளார்.
“முப்படைகளின் சட்டத்தின் கீழ் வருவோர், எந்த வகையான அரசியல் கட்சிகளுக்காகவும் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளார்கள். அதையும் மீறி மோடி அரசு நமது ராணுவ வீரர்களை அவமதிக்கிறது. ராணுவமும் மற்றும் ராணுவ வீரர்களும் எந்தவொரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட சொத்தும் அல்ல" என்றும் ரோஹித் சவுத்ரி சாடி உள்ளார்.
முன்னதாக இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் முன்வைத்திருந்தார். பாஜக அரசு தேச ராணுவத்தை அரசியல் ரீதியாகவும், தேர்தலுக்கான நோக்கத்தோடு பயன்படுத்துவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!
செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!
நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!
லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!