அமித்ஷாவுக்கு அவசரக் கடிதம் எழுதிய அண்ணாமலை: என்ன விவகாரம் தெரியுமா?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, கைது நடவடிக்கைக்குப் பின் பாஜகவினரின் அலுவலகம், இல்லங்கள் தாக்கப்படும் சம்பவம் நடந்துவரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல்களைப் பட்டியலிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில் இருப்பதாவது, “தமிழகத்தில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒருவாரமாக தேவையற்றத் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். ஆனால் முதல்வர் இதைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.” எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அவர் தன் கடிதத்தில் வகுப்புவாத சக்திகளுக்கு தமிழக அரசு துணை போவதாகவும், தவறான நிலைப்பாட்டை எடுப்பதாகவும் சில ஆவணங்களை இணைத்துள்ளார்.

கோவையில் தமிழக அரசு 1500 போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு, அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்தத் தவறியதாக அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in