நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?

தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு
விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. விஜய் மக்கள் இயக்கமும் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களை கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்கள் விஜயை சந்தித்து வாழ்த்தும் பெற்றனர். அதே நேரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

இதனிடையே, தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 2 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேட்பாளர்களை அவர்கள் தேர்ந்தெடுத்து வருவதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களை பெற்ற விஜய் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாடசித் தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள்hindu கோப்பு படம்

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

ஒவ்வொரு கட்சியில் இருந்தும், 2 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வரப்போகும் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் எடுத்துரைக்கும் ஆக்கப்பூர்வமாக கருத்துக்களை கேட்டு, அதை தேர்தலில் செயல்படுத்தவும் மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் தேர்தல் தேதிகளை அறிவிக்கவும் ஆணையயம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in