முலாயம்சிங்
முலாயம்சிங்

மறுக்கப்பட்ட உபி ஊர்தி... தீர்வு கண்ட முலாயம்சிங்... 1998ல் நடந்தது என்ன?

இந்த வருடம் குடியரசுதின ஊர்வலத்தில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் மாநிலம் முழுவதும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. இந்த சிக்கல், 1998 இல் உத்தரப்பிரதேச மாநில அலங்கார ஊர்திக்கும் வந்தது என்றால் நம்ப முடிகிறதா? இதில், அப்போது ஐக்கிய முன்னணி அரசின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த முலாயம்சிங் யாதவின் தலையீட்டால் அனுமதி பெறப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

உபியில் பாஜகவின் முதல்வராக இருந்தார் மறைந்த கல்யாண்சிங். இவரது அரசு சார்பில் வழக்கம் போல், அந்த வருடத்தின் குடியரசுதின அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்ள அலங்கார ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வருடம் உபியின் அலகாபாத்தில் நடந்துகொண்டிருந்த மஹாகும்பமேளா காரணமாக, ‘ஆஸ்தா கா மஹாபர்வ் கும்ப்’ எனும் பெயரில் ஊர்தி அமைந்தது. உபி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனுப்பப்பட்ட ஊர்தியை மத்திய பாதுகாப்புத்துறையின் குழுவினர் சார்பில் பரிசீலிக்கப்பட்டது. கடைசிநேரத்தில் உபியின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், உபியின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இப்பிரச்சினையில் மவுனமாக இருப்பதை தவிர்த்து எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சி தலைவர்களிடம் பேசி ஆலோசித்தினர். இதற்கு உதவ முன்வந்தார் அப்போதைய உபி மாநில எதிர்க்கட்சியாக இருந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ்.

உத்தரப்பிரதேச மாநில அலங்கார ஊர்தி
உத்தரப்பிரதேச மாநில அலங்கார ஊர்தி

இவர் தான் அப்போது மத்தியில் நிலவிய ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். தனது ஊர்திக்காகப் பலமுறை விருதுகள் பெற்ற உபிக்கு இந்தமுறை அனுமதி மறுத்தது ஏன்? என அமைச்சரான முலாயமும் தலையிட்டு கேள்வி எழுப்பினார். மதசார்பற்ற கூட்டணியாக இருந்த ஐக்கிய முன்னணி அரசின் முன், உபியின் தெய்வீகத்தின் அடிப்படையில் சாதுக்கள் சகிதம் முன்னிறுத்தப்பட்டது எடுபடாது எனக் காரணம் அறியப்பட்டது.

அதேசமயம், அனுமதி கிடைக்காத விரக்தியில் உபியின் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் தம் ஊர்தியுடன் உபி செல்லத் தயாராகி வந்தனர். அங்கு திடீரென தனது அரசு வாகனத்தில் வந்திறங்கினார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் முலாயம்சிங். உபியின் ஊர்தியை பார்வையிட்டவர் தனது அதிகாரிகளை அழைத்துள்ளார். உபி ஊர்திக்கு அனுமதி கிடைக்காததன் காரணமும் கேட்டுள்ளார்.

பிறகு தேர்வுகுழுவின் ஆமோதிப்புகளுக்கு தானே முன் நின்று ஒன்றன்பின் ஒன்று என பதிலும் அளித்துள்ளார் அமைச்சர் முலாயம்சிங். இதையடுத்து, உபியின் ஊர்திக்கு மறுக்கப்பட்ட அனுமதியை தேர்வுக் குழுவினர் மீண்டும் அளிக்க வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளானது. அந்த வருடம் உபியின் ஊர்திக்கும் அனுமதி கிடைத்து கலந்துகொண்டமைக்கு, அப்போது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான முலாயம்சிங் யாதவ் பாராட்டப்பட்டார் என்பது வரலாறு ஆகிவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in