`தமிழகத்தில் தேவையற்ற சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்'- அமைச்சர் எ.வ.வேலு அதிரடி அறிவிப்பு

`தமிழகத்தில் தேவையற்ற சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்'- அமைச்சர் எ.வ.வேலு அதிரடி அறிவிப்பு

"தமிழகத்தில் தேவையற்ற சுங்கச்சாவடிகளை அகற்றுவதுதான் எங்கள் நோக்கம். தமிழக அரசின் அழுத்தத்தால் சுங்க கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது" என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அண்மையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும் பல இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நிதின் கட்கரி, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் 9 சுங்கச்சாவடிகளில் 60 சதவீதம் வரை கட்டணத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வேலூரில் இன்று செய்தியாளரிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் தேவையில்லாத, விதிகளுக்கு உட்பட்டு இருக்கிற சில சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என்பதிலே மாற்று கருத்து இல்லை. மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்க கட்டணம் 40 சதவீதம் குறைக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார் என்றால் அதற்கு தமிழக அரசு கொடுத்த அடுத்த தான் காரணம். சுங்கச்சாவடிவை முறைப்படுத்தப்போகிறேன் என்று என்னிடம் அவர் கூறினார். 60 கிலோ மீட்டருக்கு தூரத்தில் ஒரு சுங்கச் சாவடி அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். தேவையற்ற சுங்கச்சாவடிகளை அகற்றுவதுதான் எங்கள் நோக்கம். தமிழக அரசின் அழுத்தத்தால் சுங்க கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in