'அது இறைவன் கையில்!': பொதுக்குழு வழக்கு தொடர்பான கேள்விக்கு ஓபிஎஸ் பதில்

'அது இறைவன் கையில்!': பொதுக்குழு வழக்கு தொடர்பான கேள்விக்கு ஓபிஎஸ் பதில்

அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எனவும் பொதுக்குழு வழக்குத் தொடர்பான தீர்ப்பு இறைவன் கையில் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டால் வாழ்வு " எனத் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் உள்ள பொதுக்குழு வழக்கு தொடர்பான கேள்விக்கு, "அது இறைவன் கையில்" என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

முன்னதாக அவரது ஆதரவாளர்கள், சென்னை அண்ணாசாலையின் இரண்டு புறங்களிலும் அதிமுக கொடி மற்றும் பதாகைகளோடு கூடி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வெள்ளமண்டி நடராஜன் மற்றும் ஜே சி டி பிரபாகரன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in