`முன்னாள் மாணவர்களை ஒன்றிணையுங்கள்’- தலைமையாசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்!

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்’முன்னாள் மாணவர்களை ஒன்றிணையுங்கள்’ - தலைமையாசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்..!

'’முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து அரசு பள்ளிகளை மேம்படுத்த தலைமையாசிரியர்கள் உதவ வேண்டும்’’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையாசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அமைச்சர், ‘’தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும்தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர்.

உங்கள் பள்ளியை மேம்படுத்த உங்களால் மட்டுமே முடியும். முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்க முடியும். அவர்களை ஒன்றிணைத்து பள்ளியை மேம்படுத்த முடியும். முன்னாள் மாணவர்களுடன் இணைந்து பள்ளியை மேம்படுத்தி இருந்தாலும் சரி அல்லது மேம்படுத்த விருப்பம் உள்ளவர்களாக இருந்தாலும் சரி பள்ளிக்கல்வித்துறையை உங்கள் விவரங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்’’ என பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in