மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான கிஷன் ரெட்டிக்கு நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் கிஷன் ரெட்டி. இந்நிலையில், இவர் வீட்டில் இருந்த போது நேற்று இரவு 10.50 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்கள் அமைச்சரை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவர் கார்டியோ நியூரோ மையத்தின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அமைச்சரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in