குறிப்பிட்ட சமூகத்தை என்ஐஏ குறி வைக்கிறதா?- வைகோ கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் பதில்

குறிப்பிட்ட சமூகத்தை என்ஐஏ குறி வைக்கிறதா?- வைகோ கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் பதில்

தேசிய புலனாய்வு முகமை குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து குற்றம் சாட்டுகிறதா?  என்பது உட்பட தேசிய  புலனாய்வு முகமையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில்  வைகோ எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், ``02.12.2022 நிலவரப்படி, தேசிய புலனாய்வு முகமை கோவை குண்டுவெடிப்பு வழக்கு உட்பட 497 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.  ஆண்டுக்கு ஆண்டு தேசிய புலனாய்வு முகமையின் வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணம், மேம்படுத்தப்பட்ட திறன், புதிய கிளை அலுவலகங்கள், மனித கடத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல், சைபர் - பயங்கரவாதம் மற்றும் வெடி பொருள்கள் சட்டம் -1908 ஆகியவை, தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் -2008 பட்டியல் 2019 ல் விரிவுபடுத்தி இருக்கிறது.

இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி நாட்டுடனான நட்புறவு, பன்னாட்டு ஒப்பந்தங்கள், தொடர்புகள் போன்றவற்றை அதன் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை விசாரிப்பதும், வழக்காடுவதும் தேசிய புலனாய்வு அமைப்பின் செயலாகும்.

தேசிய, சர்வதேச தாக்கங்கள் கொண்ட தீவிர வழக்குகளை எந்த ஒரு சார்பு அல்லது பாரபட்சமும் இல்லாமல் விசாரிப்பதற்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும். 2019-ம் ஆண்டு முதல் 02.12.2022 வரை 67 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 65 வழக்குகளில் தண்டனையும், 02 வழக்குகளில் விடுதலையும் பெறப்பட்டுள்ளது என்பதிலிருந்து தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும்  உள்ளது தெரிகிறது" என தெரிவித்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in