`உண்மையை உலகு உணரும்படி உரைத்துள்ளார் இளையராஜா'- எல்.முருகன்

`உண்மையை உலகு உணரும்படி உரைத்துள்ளார் இளையராஜா'-  எல்.முருகன்

"அம்பேத்கரின் கனவுகளை இலட்சிய இலக்காக கொண்டிருப்பவர் என்று பிரதமரை உலகுக்கு உணரும்படி உரைத்து கூறியுள்ளார்" என்று இசையமைப்பாளர் இளையராஜா குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“பிரதமர் மோடியின் ஆட்சியை அம்பேத்கர் பார்த்து இருந்தால் அவரே பெருமைப்படுவார்” என்று நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருந்தார். இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக வலதுசாரியினரும், எதிராக இடதுசாரியினரும் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அம்பேத்கரின் கனவுகளை தனது லட்சிய இலக்காக எண்ணி் செயல்படுத்திக் கொண்டிருப்பவர் பிரதமர் என்று உண்மையை உலகு உணரும்படி உரைத்துக் கூறிய இசைஞானி என்றும் ராஜா இளையராஜா” என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in