‘திமுகவினர் பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர்’ - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல்
வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல்

திமுகவினர் பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “மத்திய அரசு தரமான அரிசியை கொடுத்தாலும், தமிழக அரசு மக்களுக்கு தரமற்ற அரிசியை வழங்குகிறது. மத்திய அரசின் நலத்திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள திமுக அரசு அதனை மறைக்க பார்க்கிறது. திமுகவினர் பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர்.

தமிழகத்தில் தாமரை மலரவேண்டும். இதுதான் அதற்கு சரியான நேரம். தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது, அந்த குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in