ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்... தேவையற்றது என்கிறார் எல். முருகன்!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்த போராட்டம் தேவையற்றது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்களையும் அவர்களது ஐந்து படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறை பிடித்துச் சென்றனர்.  இது மீனவர்களிடையே பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை  இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 18ம் தேதி பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீனவர்களின் இந்த போராட்டம் தேவையற்றது என தெரிவித்துள்ளார்.

"ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தேவையற்றது. மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா - இலங்கை இருநாட்டு குழுவினர் இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!

குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படையின் 2வது தளபதி பலி!

புது கெட்டப்பில் விஜய்சேதுபதி... வைரலாகும் வீடியோ!

இன்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in