உக்ரைன் போர் தான் கியாஸ் விலை உயர்வுக்கு காரணம்: சொல்கிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்!

உக்ரைன் போர் தான் கியாஸ் விலை உயர்வுக்கு காரணம்: சொல்கிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று வந்திருந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்தும் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியின் போது எல்.முருகன் கூறுகையில், ‘திமுகவின் ஓராண்டு ஆட்சியில் சாதனையை விட வேதனைகளே அதிகம். லாக்கப் டெத் எனப்படும் காவல்நிலைய மரணங்கள் அதிகளவில் நடந்துவருகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எதையுமே நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தெளிவாகவே தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தரவேண்டிய நிலக்கரியும் வழங்கப்பட்டுத்தான் வருகிறார். உக்ரைன்- ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாகத்தான் சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது”என்றார்.

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in