அமித்ஷா கேட்டிருக்கும் ஐந்து கேள்விகள்... பதில் அளிப்பாரா ராகுல் காந்தி?

அமித்ஷா
அமித்ஷா
Updated on
2 min read

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஐந்து கேள்விகளை கேட்டு அதற்கு அவர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

யாத்திரையில் ராகுல்காந்தி
யாத்திரையில் ராகுல்காந்தி

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜகவால் மிக அதிகபட்ச தாக்குதலுக்கு உள்ளாகும் நபர் ராகுல் காந்தி தான். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் ராகுல் காந்தியை விமர்சிப்பதையே தேர்தல் பிரச்சார உத்தியாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு ராகுல் காந்தியும் உரிய பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிட ராகுல் காந்தி அஞ்சுகிறார் என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.  வயநாடு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அந்த சவாலை ஏற்று உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார். நேற்று அத்தொகுதியில் பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  ராஜீவ் காந்திக்கு ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அமித்ஷா
அமித்ஷா

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் "ராகுல்காந்திக்கு நான் பகிரங்கமாக 5 கேள்விகள் விடுக்கிறேன். 1. 'முத்தலாக்' முறையை பிரதமர் மோடி ஒழித்துக் கட்டினார். அது நல்லதா? கெட்டதா? நீங்கள் 'முத்தலாக்'கை திரும்ப கொண்டுவர விரும்புகிறீர்களா? இல்லையா? 

2. முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு பதிலாக, பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமா? கூடாதா?

3. பிரதமர் மோடி நடத்திய துல்லிய தாக்குதல் நல்லதா? கெட்டதா? துல்லிய தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, அதை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? 

4.அயோத்தி ராமர் கோவிலுக்கு நீங்கள் ஏன் செல்லவில்லை? 

5. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை நீக்கியதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

இந்த 5 கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டுத்தான், ரேபரேலி மக்களிடம் ராகுல்காந்தி வாக்கு கேட்க வேண்டும்" என்று அமித்ஷா பேசினார். பாரதிய ஜனதாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி இதற்கும் உரிய பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in