ஆளுநர் ரவியுடன் மத்திய கல்வி அமைச்சர், எல்.முருகன், அண்ணாமலை திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

ஆளுநர் ரவியுடன் மத்திய கல்வி அமைச்சர், எல்.முருகன், அண்ணாமலை திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய கல்வித்துறை அமைச்சர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மத்திய கல்விக் கொள்கையை நிறைவேற்ற முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. அதே நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய கல்வி கொள்கை குறித்து ஆதரவான கருத்து தெரிவித்து வருகிறார். இந்த கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் தமிழகம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் பேசி வருவது தமிழக அரசுக்கும் அவருக்கு இருக்கும் இடையேயான உறவை மேலும் விரிவடைய செய்துள்ளது.

அதே நேரத்தில் தமிழக அரசு அனுப்பி வைக்கும் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ள ஆளுநருக்கு எதிராக தமிழக அமைச்சர்களும், திமுக எம்பிக்களும் கடுமையாக பேசி வருகின்றனர். இதனிடையே, தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக கருத்து கேட்டு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லையில் இன்று நடைபெற்ற மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதனுடைய தமிழக ஆளுநர் ரவியை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ராஜ்பவனில் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்விக் கொள்கை குறித்து பேசியதாக தெரிகிறது. ஆளுநரை மத்திய அமைச்சர்கள், அண்ணாமலை ஆகியோர் ஒரே நேரத்தில் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in