உலகப்பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரம் இந்தியா: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் என்ன?

பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023மத்திய பட்ஜெட் 2023 முக்கிய அறிவிப்புகள்

நடப்பாண்டியில் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் காணும், மற்ற நாடுகளை காட்டிலும் இது அதிகம். உலகப்பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது. இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: பிரதமர் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிகணக்கில் ரூ.2.2 லட்சம் கோடி உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது. 9.6 கோடி எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 220 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை நாட்டில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை முக்கியமாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ள்து. 7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன. வேளாண் துறையில் புத்தாக்க தொழில்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். மீனவர் நலனுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவுத்தளம் உருவாக்கப்படும். வேளாண் துறைக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். பழங்குடியினர் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ஏழைகளுக்கான உணவுத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு 79 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக இன்று காலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in