பரபரப்பு... அடுத்த வாரம் அமலாகிறது பொது சிவில் சட்டம்?

புஷ்கர் சிங் தாமி
புஷ்கர் சிங் தாமி

உத்தரகண்டில், பொது சிவில் சட்டம் அடுத்த வாரம் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகண்டில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தது. அங்கு ஆட்சியை தக்க வைத்ததைத் தொடர்ந்து, பொது சிவில் சட்டம் குறித்து ஆராய உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் தேசாய் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் புஷ்கர் சிங் தாமி அமைத்தார்.

இக்குழுவானது பொது சிவில் சட்டம் குறித்த வரைவு அறிக்கையை பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு தயாரித்துள்ளது. ஓரிரு நாளில் இந்த அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அம்மாநில அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரஞ்சனா தேசாய் அறிக்கை அளித்த பிறகு, சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை கூட்ட மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. அதில், பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதனைத் தொடர்ந்து அந்த சட்டம் அமல்படுத்தப்படும்.அந்த வரைவு அறிக்கையில், பலதார திருமணங்களை தடை செய்யவும், 'லிவ் இன் ' முறையில் வசிக்கும் தம்பதிகள் பதிவு செய்வதை கட்டாயமாக்கவும், பரம்பரை சொத்தில் மகன் மற்றும் மகளுக்கு சம உரிமை அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த சட்டம் அமலுக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமை உத்தரகண்டிற்கு கிடைக்கும். இம்மாநிலத்தை தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், குஜராத் மாநிலமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in