தாங்க முடியாத முதுகு வலி... இடுப்பு பெல்ட்டோடு பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்!

தாங்க முடியாத முதுகு வலி... இடுப்பு பெல்ட்டோடு பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்!

கடும் முதுகுவலி காரணமாக என்னை மூன்று வாரங்கள் படுக்கையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து ஓய்வு எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முதுகு வலி காரணமாக, சட்டையை தூக்கியபடி தான் அணிந்திருக்கும் இடுப்பு பெல்ட்டை காட்டிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ‘நான் வலி நிவாரணி ஊசிகள் மற்றும் தாங்க முடியாத முதுகு வலிக்கான மருந்துகளை உட்கொண்டிருக்கிறேன். நானும் பெல்ட் அணிந்திருக்கிறேன். மருத்துவர்கள் எனக்கு மூன்று வாரங்கள் படுக்கையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர், மேலும் நிற்கவும், நடக்கவும் கூடாது என என்னை எச்சரித்துள்ளனர். ஆனால் நான் இப்போதும் உங்களிடையேதான் இருக்கிறேன்.

மக்களவைத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். எனவே நான் உங்களுக்காக இப்போது போராடவில்லை என்றால், நீங்கள் அடுத்த ஐந்து வருடங்கள் வறுமை, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மையால் அவதிப்பட வேண்டியிருக்கும். எனவே இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவின் உதவியாளர்கள், அவர் கூட்டத்தில் உரையாற்றும் போது எழுந்து நிற்க உதவும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தற்போது பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பீகாரில் உள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுகிறது, இதில் இன்னும் 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேஜஸ்வி யாதவ் பீகார் மற்றும் ஆர்ஜேடி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் பிற மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று அவர் ஜார்கண்ட் மாநிலம் பலமு தொகுதியில் இந்திய கூட்டணியின் ஆர்ஜேடி வேட்பாளரான மம்தா புயனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இன்று, அவர் பீகாரின் ஜஹானாபாத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது தேர்தல் பிரச்சாரங்களில் கடும் முதுகுவலி காரணமாக நாற்காலியில் அமர்ந்தபடியே உரையாற்றி வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in