சுதந்திரமான நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்... இந்தியாவுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

ஐ.நா
ஐ.நா

இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.   மேலும், அந்தக் கட்சிக்கு 1,700 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்  அமலாக்கத் துறையினரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினால் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.  சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை மத்திய அரசின் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும்  பிரதான எதிர்க்கட்சிகள் முன் வைத்திருக்கின்றன.

இந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. கேஜ்ரிவால் கைது, காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தேர்தல் நடைபெறும் ஒரு நாட்டில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in