பள்ளி வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த உணவுக்கழிவுகள்
பள்ளி வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த உணவுக்கழிவுகள்

எங்க ஸ்கூல என்ன பண்ணி வச்சிருக்கீங்க?... தேர்தல் அதிகாரிகளை வெளுத்து வாங்கும் யுகேஜி மாணவி: வைரல் வீடியோ!

சென்னையில் வாக்குப்பதிவு மையமாக செயல்பட்ட தொடக்கப்பள்ளி வளாகத்தில் உணவுக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, சிறுமி ஒருவர் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மட்டும் புதுச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக 40 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்காக அரசுப் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முகப்பேர் வேணுகோபால் தெருவில் உள்ள தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தேர்தலின் போது இங்கு பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு மதிய உணவு, குளிர்பானம், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவற்றை சாப்பிட்டு விட்டு கழிவுகளை ஆங்காங்கே சிலர் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்தப் பள்ளிக்கு நேற்று வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், இந்த கழிவுகள் அகற்றப்படாமல் அங்கேயே கிடந்தது தெரிய வந்தது. மேலும் பள்ளி வகுப்பறையில் இருந்த ஸ்லாப்புகளையும் சிலர் உடைத்துப் போட்டுச் சென்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி
சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி

இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை விமர்சித்து அந்த பள்ளியைச் சேர்ந்த யுகேஜி மாணவி ஒருவர் பேசியுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஊடக செய்தியாளர் ஒருவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ”எங்களோட கிளாஸ் ரூம என்ன பண்ணி வச்சிருக்கீங்க? அரசு அதிகாரிகள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் சாப்பிட்ட உணவு குப்பைகளை கூட அகற்றாமல் பள்ளி வளாகத்திலேயே இப்படி அசுத்தமாக விட்டுச் சென்று இருக்கிறீர்கள்.

எங்கள் பள்ளியை நாங்களே தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். வெளியில் இருந்து வருபவர்களும் அதே போன்று செய்ய வேண்டும் என்று தெரியாதா?” என அடுக்கடுக்காக அந்த சின்னஞ்சிறு மாணவி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in