முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலாக பசும்பொன் செல்லும் உதயநிதி!

முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலாக பசும்பொன் செல்லும் உதயநிதி!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 11-வது குருபூஜை நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திடீர் முதுகுவலி காரணமாக முதல்வர் ஸ்டாலின் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வரின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

முதுகுவலி காரணமாக முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் கிராமம் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in