`அதிமுகவை யாரும் விமர்சிக்காதீங்க'- திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

`அதிமுகவை யாரும் விமர்சிக்காதீங்க'- திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

“அதிமுகவில் என்ன நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும். அதிமுகவை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. அவர்களே தங்களை விமர்சனம் செய்துகொள்வார்கள்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் விழா உத்திரமேரூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மூன்று மாதங்களில் கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் என்னிடம் கொடுத்த மனுக்களை முதல்வரிடம் கொடுத்துள்ளேன்.

மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதிமுகவை நாம் யாரும் விமர்சிக்க வேண்டியதில்லை. சொந்தக் கட்சியைப் பற்றி அவர்களே கடுமையாக தாக்கி பேசிவருகிறார்கள். இதைக் கடந்த சில தினங்களாக நீங்கள் அனைவரும் பார்த்து வருகின்றீர்கள்'' என்றார். இதைத் தொடர்ந்து திமுக மூத்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழி வழங்கினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in