`இறுதியில் செருப்பை கையில் எடுத்து இருக்கிறார்கள்'- பாஜகவை விளாசிய உதயநிதி ஸ்டாலின்

`இறுதியில் செருப்பை கையில் எடுத்து இருக்கிறார்கள்'- பாஜகவை விளாசிய உதயநிதி ஸ்டாலின்

"எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் கடைசியில் செருப்பை எடுத்து இருக்கிறார்கள்" என்று பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னையில் இன்று திமுக சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்று பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, "அண்ணன் முத்தரசன் சொல்வதைப்போல் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் கடைசியில் செருப்பை எடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள், மாணவச் செல்வங்கள், தாய்மார்கள் தக்க பதில் அளிப்பார்கள். அவர்கள் முடிவெடுத்துவிட்டால் யாராலும் மாற்ற முடியாது. மக்களுடன் யார் கூட இருக்கிறார்கள்? யார் உழைக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சி அமைத்து விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது இப்படி பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்தது திமுக தான். இப்போது ஆட்சி அமைத்த பிறகும் அதை செய்து கொண்டிருக்கிறோம். இதனால் உண்மையாக மக்களுக்காக பாடுபடுவது யார் என்பது உங்களுக்கு தெரியும். அந்த நம்பிக்கையில் இருக்கிறேன். அதேபோல் கரோனா விட கொடுமையான பாஜக ஆட்சியை விரட்டி அடிப்போம் என்று சூளுரைத்து அந்த பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்குவோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in