உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணனின் காட்டத்திற்குக் காரணம் என்ன?

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுவாமி தோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமை பதிக்கு தலையில் தலைப்பாகை கட்டாமல் சென்றது சர்ச்சையானது. இந்நிலையில் இவ்விஷயத்தில் பாஜக மூத்தத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் தலைபதி அய்யா வழித் தொண்டர்களுக்கும், அவரை உணர்ந்தோருக்கும் புனிதத் தலமாகும். அந்த பதிக்குள் சென்று வணங்குபவர்கள் ஆண்களாக இருந்தால் மேலாடை அணியக் கூடாது. தலையில் தலைப்பாகை கட்டாம் செல்லக்கூடாது. நெற்றியில் திருநாமம் சூட்ட வேண்டும் ஆகிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில் அண்மையில் குமரி மாவட்டம் வந்த உதயநிதி ஸ்டாலினை, நாகர்கோவில் மேயர் மகேஷ் சுவாமிதோப்பு பதிக்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் சென்ற அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விதிகளை பின்பற்றி மேலாடையின்றி, தலையில் தலைப்பாகைச் சூடி உள்ளே சென்று வணங்கினர். ஆனால் உதயநிதி ஸ்டாலினும், மேயர் மகேஷ்ம் வேண்டுமென்றே இந்த விதிகளை மீறியுள்ளனர். இதற்காக உதயநிதி ஸ்டாலினும், மகேஷும் அய்யாவை வணங்கித் தங்கள் தவறுக்கு பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்களைப் பதிக்கு அழைத்துச் சென்ற முதன்மை குரு பாலஜனாதிபதியும் தன் பொறுப்பை விட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in