உங்களைப்போல நாங்கள் பச்சோந்தி கிடையாது... போட்டோவை காட்டி இபிஎஸ்சை கடுமையாக விமர்சித்த உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நீங்கள் ஓபிஎஸிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், சசிகலாவிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், மோடியிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள்.உங்களை போல மாற்றி மாற்றி பேச திமுகக்காரன் ஒன்றும் பச்சோந்தி இல்லை என எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனர் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், " நேற்று எடப்பாடி பழனிசாமி திருச்சியில் என்னைப் பற்றிப் பேசியுள்ளார். சும்மா உதயநிதி கல்லைக் கல்லை காட்டிக் கொண்டு இருக்கிறார் என்று எடப்பாடி சொல்லியுள்ளார்" என்ற சொன்ன உதயநிதி செங்கல்லை எடுத்துக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "இது தான் மோடி, எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா ஆகியோர் 2019இல் மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டும் போது வைத்த அந்த கல். அங்கே அவர்கள் வைத்தது இந்த ஒரு கல்லை மட்டும் தான். அதையும் நான் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். நீங்க அங்கே மருத்துவமனையைக் கட்டும் வரை நான் திருப்பி தர மாட்டேன். நிச்சயம் தர மாட்டேன்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி என்ன சொல்கிறார். உதயநிதி ஸ்கிரிப்டை மாற்றிப் பேச வேண்டும். திரும்ப திரும்ப கல்லை எடுத்துப் பேசுகிறார். நானாவது எய்ம்ஸ் கல்லைத் தான் காட்டினேன். இங்கே ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்" என்று சொன்ன உதயநிதி 2019 எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் எடப்பாடி ஆகியோர் இருந்த படத்தை எடுத்துக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி, "நானாவது கல்லைத் தான் காட்டினார். ஆனால் எடப்பாடி பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார். கல்லை வைத்து விட்டு பல்லைக் காட்டி எடுத்த போட்டோ தான் இது. இப்படி இருந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி இப்போது என்னை ஸ்கிரிப்ட்டை மாற்றிப் பேசுங்கள் என்கிறார். நான் ஏன் ஸ்கிரிப்ட்டை மாற்ற வேண்டும்.எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். நீட் தேர்வு வேண்டாம். மாநில சுயாட்சி வேண்டும். இதுவே எங்கள் கொள்கை. என்னால் உங்களை போல நேரத்திற்கு தகுந்தபடி ஆளுக்கு தகுந்தபடி ஸ்கிரிப்ட்டை மாற்றி பேச முடியாது.

நீங்கள் ஓபிஎஸிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், சசிகலாவிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், மோடியிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள். உங்களை போல மாற்றி மாற்றி பேச திமுகக்காரன் ஒன்றும் பச்சோந்தி இல்லை. நான் கருணாநிதியின் பேரன். நான் எனது கொள்கைகளை தான் பேசுவேன். மாநில உரிமைகளை மீட்க தேவையானதை செய்வேன்" என்று அவர் எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.

முன்னதாக நேற்று திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எப்போது பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொள்கிறார். அதைத்தான் மூன்று வருடங்களாக காட்டிக்கொண்டிருக்கிறார். செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி பிரயோஜனம் இல்லை. விளம்பரத்திற்காக செங்கல்லை காட்டுகிறார். ஸ்கிரிப்ட்டை மாத்துப்பா.. கதைய மாத்து. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திமுக எம்.பி.க்கள் என்ன செய்தார்கள்? 38 எம்.பிகள் 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்” என பேசியிருந்தார்

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in