உதயநிதி காருக்கும் ஒரு கணக்கிருக்காம்!

உதயநிதி
உதயநிதி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு தரப்பிலிருந்து டி.என்.04 -டி 6666 என்ற எண் கொண்ட கார் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தேசியக்கொடியுடன் உலா வரத் தொடங்கிவிட்டார் சின்னவர் உதயநிதி. இந்த காரை அவர் தேர்வு செய்ததற்குப் பின்னணியில் முக்கியமான சென்டிமென்ட் ஒன்று இருக்கிறதாம்.

‘6666’ என்ற எண்ணை அரசியல்வாதிகள் பயன்படுத்தினால் உச்சத்துக்கு வருவார்கள் என்னும் சென்டிமென்ட்டால் இந்த எண் கொண்ட காரை உதயநிதியே டிக் செய்தாராம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பல கார்கள் இருந்தாலும், அவர் விரும்பிப் பயணித்த காரின் எண் டி.என்.07 - ஏடி 6666 தான்.

இதேபோல் அமமுகவின் டிடிவி தினகரனின் கார் எண்ணும் கூட டி.என்.07 -சி இசட் 6666 தான். தெலங்கானா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கார் எண்ணும் 6666 என்பதுதானாம். இந்திய அளவில் பல பிரபலங்களின் விருப்பத்திற்குரிய கார் எண்ணாகவும் இதுவே உள்ளதாக பட்டியல் போடும் நெட்டிசன்கள், ‘பகுத்தறிவுப் பாசறையில் வந்தவருக்கு இப்படியொரு சென்டிமென்ட்டா?’ என்று கொளுத்திப் போடுகிறார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in