உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை: அறங்காவலர் பாபு விளக்கம்

அறங்காவலர் பாபு
அறங்காவலர் பாபு

உதயநிதி அறக்கட்டளைக்கு எந்தவிதமான அசையா சொத்துக்களும் கிடையாது என அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு தெரிவித்துள்ளார்.

உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான 36.3 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘’உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும் அறக்கட்டளை வாயிலாக நாங்கள் செய்துள்ள நலப் பணிகளுக்கான வரவு செலவு கணக்குகளையும் முறையாக வருமானவரித்துறையிடம் சமர்ப்பித்து வருகிறோம்.

அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 27-ம் தேதி அன்று வெளிவந்த ஒரு பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை போல் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.

மேலும் அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களை கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு களப்பணி ஆற்றுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in