'நான் சின்னவன் தான்' - உதயநிதி ஸ்டாலின் திடீர் பேச்சு!

'நான் சின்னவன் தான்' - உதயநிதி ஸ்டாலின் திடீர் பேச்சு!

“திமுகவில் என்னை ‘சின்னவர்’ என்று அழைக்கிறார்கள். ஆம் உங்களோடு ஒப்பிடுகையில் நான் சின்னவன் தான் '' என்று அறிவாலயத்தில் நடந்த கருத்தரங்கில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயம் கலைஞர் அரங்கில் ‘கலைஞர்-99’ கருத்தரங்கு மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறைத் தொடக்க விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவைத் தொடக்கி வைத்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ திமுகவிற்கு மாற்று பாஜக என்கிறார்கள். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பாஜக அடக்கி ஆள்வதாகக் கூறுகிறார்கள். அதைப்பற்றிய அரசியல் புரிதலோடு நாம் இருக்கவேண்டும்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியரின் எழுத்துகள் நம்மிடம் உள்ளன. திராவிட மாடல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் நம் தலைவர் ஸ்டாலினின் சாதனைகளும் உள்ளன. நம் கொள்கைகளை பாமர மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் பயிற்சி பாசறை வகுப்பை ஆரம்பித்துள்ளோம். திமுகவில் என்னை ‘சின்னவர்’ என்று அழைக்கிறார்கள். ஆம் உங்களை ஒப்பிடுகையில் நான் சின்னவன் தான். மோடிக்கு மேடையிலேயே வகுப்பெடுத்தவர் நம் தலைவர். மோடியை மேடையில் வைத்து மாநில தேவை குறித்து கோரிக்கை வைத்தார் முதல்வர் ஸ்டாலின். பிரதமர் மேடையில் இருக்கும்போதே கோரிக்கை வைத்த ஒரே முதல்வர் ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் ஆட்சி'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in