`என் காரை எடுத்துட்டுப்போங்க ஈபிஎஸ்; ஆனா, அங்க மட்டும் போகாதீங்க'- உதயநிதி பேச்சால் சிரிப்பலை

`என் காரை எடுத்துட்டுப்போங்க ஈபிஎஸ்; ஆனா, அங்க மட்டும் போகாதீங்க'- உதயநிதி பேச்சால் சிரிப்பலை

எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி என்னுடைய காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆனால் அந்த காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எனக்கு இன்று பேச வாய்ப்பளித்த முதல்வர், துரைமுருகன், கொறடாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, மிக முக்கியமாக எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சித் துணைத் தலைவருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் கடந்த ஆண்டு நான் பேசும் போது எதிர்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்து விட்டீர்கள். நேற்றும் வெளியே சென்று வீட்டீர்கள். இன்று நான் பேசும் போது உள்ளே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி.

வெளிநடப்பு செய்தாலும் என் காரில் தான் ஏற செல்கிறீர்கள். நீங்கள் மட்டும் இல்லை நானும் 3 நாட்கள் முன்பு உங்க காரில் ஏற சென்றேன். அடுத்த முறை தாராளமாக என் காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஆனால் அந்தக் காரை எடுத்துவிட்டு கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள்" என பேசியதும் சிரிப்பலை எழுந்தது. அப்போது, பதிலளித்துப் பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் எங்கள் கார் எப்போதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு தான் செல்லும் என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in