கமலாலயம் வர உதயநிதி காருக்கு தகுதியே இல்லை - அண்ணாமலை அதிரடி

கமலாலயம் வர உதயநிதி காருக்கு தகுதியே இல்லை -   அண்ணாமலை அதிரடி

கமலாலயத்திற்கு உதயநிதி ஸ்டாலினின் கார் வரத் தகுதி இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்," தமிழகம் கடந்த 2006-2011-ம் ஆண்டு இருந்ததைப் போல இருண்ட கால ஆட்சியாக இருக்கிறது. செயற்கை மின்வெட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறது. தனியாரிடம் மின்சாரம் வாங்க திமுக திட்டமிட்டுள்ளது. தமிழகத்திற்கு 22 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். அமைச்சர்களுக்கு கமிஷன் வர திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுக, திமுக யாராக இருந்தாலும் டென்ஜெட்கோ நஷ்டத்தில் இயங்குவது குறித்து 2006-ம் ஆண்டு முதல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உதயநிதி ஸ்டாலினின் கார் கமலாலயம் வர தகுதி இல்லை. அவர் சினிமா படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு மக்கள் பணி செய்யட்டும். ரஜினி படத்தில் வருவது போல கமலாலயம் வர உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்தால் கார் ஸ்டார்ட் ஆகாது" என்று அண்ணாமலை கூறினார்.

Related Stories

No stories found.