கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி

கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி

திமுக துணைப்பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கனிமொழி எம்.பிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்வதற்கான திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திமுகவின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பியை சென்னை சிஐடி இல்லத்தில் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in