ஆசையாய் அதிபர் இருக்கையில் அமர்ந்த பெண்கள்; சிக்க வைத்த வீடியோ: அதிரடி காட்டியது போலீஸ்!

ஆசையாய் அதிபர் இருக்கையில் அமர்ந்த பெண்கள்; சிக்க வைத்த வீடியோ: அதிரடி காட்டியது போலீஸ்!

இலங்கை அதிபரின் அதிகாரப்பூர்வ இருக்கையில் அமர்ந்ததாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பொருளதார நெருக்கடிக்கு காரணமான ஜூலை 9-ம் தேதி கோத்தபய ராஜபக்சவிற்கு எதிரான போராட்டம் மக்கள் புரட்சியாக வெடித்தது. இதனால் அங்கிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பிச் சென்றார். அப்போது அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தினர். இன்னொரு குழுவினர் மாளிகைக்குள் இருந்த சமையலறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சமைக்கத் தொடங்கினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதே போல அன்றைய தினம் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இருக்கையில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் இருவரும் இலங்கையின் மொரட்டுவைப் பிரதேசத்தை பெண்கள் எனப்தும், அவர்களுக்கு 49, 55 வயது என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கடை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரையும் இன்று கைது செய்த போலீஸார், அதிபர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைதல், பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துவதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அதிபர் மாளிகையில் இருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்ற கோத்தபய தனது பதவியை ராஜினமா செய்தார். தற்போது ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அதிபராக செயல்பட்டு வருகிறார். அவர் ஜூலை 9-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in