`அண்ணாமலை இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்; கொஞ்ச நாளில் நிதானமாகி விடுவார்'- டி.டி.வி.தினகரன்

`அண்ணாமலை இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்; கொஞ்ச நாளில் நிதானமாகி விடுவார்'- டி.டி.வி.தினகரன்

"அண்ணாமலை இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாளில் அவர் நிதானமாகி விடுவார்" என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் போதை கலாச்சாரம் பெருகிக் கொண்டு இருக்கிறது. விடியல் ஆட்சி தருகிறோம் என்று கூறிவிட்டு முதல்வரே ஏண்டா விடியுது என்று புலம்பும் நிலை தான் இன்றைக்கு இருக்கிறது. இதே நிலை நீடித்தால் நிச்சயம் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் தான் தாய்மொழி. அனைத்து மாநிலங்களும், தன் தாய்மொழி முக்கியம். தாய் மொழி வழியில் கல்வி கொடுக்கிறோம் என்பது அனைவருக்கும் அவசியமானது. அதுபோல தமிழ்நாட்டில் எந்த காரணத்தை கொண்டும் எந்த மொழியையும் மக்கள் விரும்பி தான் ஏற்றுக் கொள்வார்களே தவிர திணிப்பை விரும்ப மாட்டார்கள். ஆகையால் இது போன்ற பிரச்சினைகளில் ஆளுங்கட்சி ஈடுபடாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.

மத்திய அரசு எப்படி இந்தியை திணிக்க முடியும். 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. ஒரு கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கும். ஏற்கெனவே 1965-ல் இந்தி திணிப்பு காரணத்தால்தான் காங்கிரஸ் ஆட்சி பறிபோனது. இன்று வரைக்கும் அவர்களால் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாமல் போவதற்கு காரணம் திணிப்பு தான். அது போன்ற ஒரு விபரீத முயற்சியில் மத்திய அரசு ஈடுபடாது என்பது என்னுடைய கருத்து. செய்தியாளரிடம் அண்ணாமலை நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாளில் அவர் நிதானமாகி விடுவார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in