டிடிவி தினகரன் 21-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும்!

அமலாக்கத் துறை சம்மன்
டிடிவி தினகரன் 21-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும்!

டிடிவி தினகரன் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் வரும் 21-ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக இடைத்தரகர் சுகேஷ் என்கிற சந்திரசேகர் கடந்த 2017-ல் டெல்லி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்கில் தினகரன் மட்டுமல்லாது, அவரது உதவியாளர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஜாமீனில் விடுதலையானார் தினகரன். இதனிடையே அவரும், சசிகலாவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து அமமுகவைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார் தினகரன்.

ஏற்கெனவே திகார் சிறையில் இருக்கும் சுகேஷை அழைத்து அமலாக்கத் துறையினர் ஏப்ரல் 4-ம் தேதி வாக்குமூலம் பதிவுசெய்தனர். தொடர்ந்து தினகரனிடமும் அமலாக்கத் துறையினர் கடந்த 12-ம் தேதி விசாரணை நடத்தினர்.

இப்போது அதன் தொடர்ச்சியாக, மீண்டும் தினகரன் வரும் 21-ம் தேதி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in