`ஆளுநர் நடந்து கொண்டது சரியில்ல'- கண்டிக்கிறார் தினகரன்

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

``மரபுகளை உடைத்துவிட்டு சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர்  நடந்து கொண்டது சரியில்ல'' என்று தமிழக ஆளுநருக்கு எதிராக அமமுக பொதுச் செயலாளர்  டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது இன்று நடைபெற்ற விஷயங்கள் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  அந்த வகையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனும்  தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இரண்டு தரப்பையும் அவர் கண்டித்துள்ளார்.

அறிஞர் அண்ணா சொன்னது போல ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதே நேரத்தில் அரசியல் சட்டப்படி அந்த பதவி இருக்கும்வரை அதில் இருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம்.

இதைப் போன்ற மரபுகளை உடைத்துவிட்டு சட்டப்பேரவையை  அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்து கொண்டதும் சரியானது அல்ல. ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல் போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும் மாநிலத்துக்கும் தான் பாதிப்பை ஏற்படுத்தும்'  என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in