
பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்றும் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதில் இருந்து, அந்த கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் குறித்த யூகங்கள் தொடர்ந்தன. அந்த வகையில் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் பாஜக கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் அதனை உறுதி செய்யும் வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்படி பாஜக கூட்டணியில் அமமுக இணைவது உறுதியாகியுள்ளது.