‘எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என சொன்னோமோ, அதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது' - டிடிவி.தினகரன் ஆதங்கம்

 ‘எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என சொன்னோமோ, அதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது' - டிடிவி.தினகரன் ஆதங்கம்

எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது. தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்

அவரின் மற்றொரு ட்வீட்டில், “மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய தி.மு.க அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து தி.மு.க அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று.

மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. இதுதான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'சொல்லாததையும் செய்வதோ?” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in