`இணைய வேண்டாம்; ஒன்றிணைந்து செயல்படுவோம்'- ஈபிஎஸ்சை அழைக்கும் டி.டி.வி.தினகரன்

`இணைய வேண்டாம்; ஒன்றிணைந்து செயல்படுவோம்'- ஈபிஎஸ்சை அழைக்கும் டி.டி.வி.தினகரன்

``ஓபிஎஸ் கூறுவது போல அனைவரும் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்'' என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் கூறி வருகிறார். அது சரியான கருத்தாகும். அனைவரும் ஒன்றிணைந்து திமு‌க என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றி விடுவதற்குச் சரியான வழியைச் செயல்படுத்த வேண்டும். நேற்று வரை நடந்ததை மறந்து விட்டு எல்லாம் நல்லதற்கே, நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும்.

அவரவர் அவரவராக இருந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் நான் அனைவருக்கும் கூறுகிறேன். யாரும் யாருடனும் இணைய வேண்டாம். அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். தேர்தலை ஒன்று சேர்ந்து சந்திக்கலாம். அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் பழையதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கலாம். அரசியல் பற்றித் தெரியாமல் ஜெயக்குமார் தொடர்ந்து எதையெதையோ பேசிவருகிறார். அவர் தெரிந்துதான் பேசுகிறாரா எனத் தெரியவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in