ஜார்க்கண்ட் அரசு தப்புமா?... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

சம்பாய் சோரன்
சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் மாநில அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

அரசு நிலங்களை அபகரித்ததாகவும் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்று ரூ.600 கோடி மோசடி செய்ததாகவும் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த நிலையில், கடந்த மாதம் 31-ம் தேதி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் ஹேமந்த் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்வராக பதவியேற்க உரிமை கோரினார். இதையடுத்து சம்பாய் சோரன் ஆட்சியமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.

சம்பாய் சோரன்
சம்பாய் சோரன்

இந்த சூழலில் கடந்த 2-ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொறுப்பு ஏற்றுள்ள சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க ஆளும் கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐதராபாத்தில் இருந்து ராஞ்சி திரும்பியுள்ளனர். 80 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசுக்கு 47 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இதன் காரணமாக ஜார்க்கண்ட் மாநில அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என ஆளுங்கட்சி தரப்பு கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in