முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகருக்கு சிக்கல்

விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தலைமை
முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகருக்கு சிக்கல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்குபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் பிரமுகரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் சிக்கல் எழுந்தது பினராயி விஜயனால்!

கேரளத்தின் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டதால் சிக்கலில் சிக்கியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான கே.வி.தாமஸ்.

மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் சீதாராம் யெச்சூரி, பினராயி விஜயன்
மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் சீதாராம் யெச்சூரி, பினராயி விஜயன்

கண்ணூரில் நடந்த தேசிய மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் பேச மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங் எம்.பி சசிதரூர், மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தாமஸ் ஆகியோரை மார்க்சிஸ்ட் கட்சி அணுகிவருவது குறித்தும், இதில் சசிதரூர் சஞ்சலத்தில் இருப்பது குறித்தும் ஏற்கெனவே காமதேனு ஹாட்லீக்ஸ் பகுதியில் எழுதியிருந்தோம். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொள்ளக் கூடாது என சோனியா காந்தி தடைபோட்டார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் கே.வி.தாமஸ் கூட்டத்திற்குச் சென்றதால் அவரிடம், காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி ஒழுங்கு விசாரணைக்குழு விளக்கம் கேட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத்தலைவர் கே.சி.வேணுகோபால், இந்தக் கூட்டத்திற்கு சசிதரூர், கே.வி.தாமஸ் இருவரையும் அழைத்திருந்தாலும், இருவரும் செல்ல மாட்டார்கள் என தொடர்ந்து ஊடகத்தினர் மத்தியில் பேட்டி கொடுத்துவந்தார். இந்நிலையில் கே.வி.தாமஸ் கூட்டத்திற்குச் சென்றது சர்ச்சையானது. இப்போது விளக்கம் கேட்கப்பட்டிருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.வி.தாமஸ், ‘இதை நான் உரிய விளக்கத்தோடு எதிர்கொள்வேன். மரணம் வரையிலும் காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன்’’ என்று சொன்னார்.

இதனிடையே எதிர்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் கே.வி.தாமஸ் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாக பேசத் துவங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.