மம்தாவை சூழும் நெருக்கடி: மேற்குவங்க திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது

மம்தாவை சூழும் நெருக்கடி: மேற்குவங்க திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா இன்று அதிகாலை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் இந்த முறைகேடு வழக்கில் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ர்ந்து இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட இரண்டாவது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இவர்.

பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜியுடன் தொடர்புடைய இடங்களில் இருந்து பல கோடி மதிப்புடைய ரொக்கம் கைப்பற்ற நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனையை விசாரிக்கும் அமலாக்கத்துறை , பார்த்தா சாட்டர்ஜி வாட்ஸ்அப் மூலமாக மாணிக் பட்டாச்சார்யாவுடன் லஞ்சம் வசூலிப்பது குறித்து உரையாடியதாக தெரிவித்துள்ளது.

பழசிபாரா சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவான மாணிக் பட்டாச்சார்யா மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஏற்கெனவே இந்த முறைகேடு விசாரணையில் இவரது பெயரும் அடிபட்டதால், மேற்கு வங்க ஆரம்பக் கல்வி வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து மாணிக் பட்டாச்சார்யா நீக்கப்பட்டார்.

திரிணமூல் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஜூலை மாதம் கைதானார். அதன் பின்னர் பல கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிர்பூம் மாவட்டத் தலைவர் அனுப்ரதா மொண்டலை சிபிஐ அவரது இல்லத்தில் ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. இந்த நிலையில் தற்போது திரிணமூலின் மற்றொரு எம் எல் ஏவும் கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் மம்தா பானர்ஜி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in