'உங்களை மாதிரி நடிகைகளையே வெச்சிக்கிற கம்பெனி கிடையாது': திருச்சி சூர்யா சிவா ட்விட்டால் மீண்டும் சர்ச்சை

'உங்களை மாதிரி நடிகைகளையே வெச்சிக்கிற கம்பெனி கிடையாது':  திருச்சி சூர்யா சிவா ட்விட்டால் மீண்டும் சர்ச்சை

சமூக வலைதளங்களில் திமுக, பாஜக மோதல் அனலைக் கிளப்பி வரும் நிலையில், மீண்டும் சர்ச்சையான கருத்துகளைத் திருச்சி சூர்யா சிவா பகிர்ந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் இருந்து வந்தது. பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாகப் பேசிய ஆடியோ வெளியானது- அப்போது, சூர்யா சிவாவை நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்திருந்தார். இந்நிலையில் பாஜகவில் உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்ததன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே வேளையில் தொடர்ந்து பாஜக உள்விவகாரங்களைத் தொடர்ந்து பொதுவெளியில் விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா சிவாவும் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.  ஆனால் சூர்யா சிவாவின் பதிவுகள் வன்மம் நிறைந்ததாக இருப்பதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

காயத்ரி ரகுராம் பகிர்ந்துள்ள திருச்சி சூர்யாவின் ட்விட்.
காயத்ரி ரகுராம் பகிர்ந்துள்ள திருச்சி சூர்யாவின் ட்விட்.

அவரின் பதிவில், ‘அப்படியே வெச்சுக்கோ, ஆனா உங்களை மாதிரி நடிகைகளையே வெச்சிருக்கிற கம்பெனி கிடையாது பா. புரியவில்லை என்றால் போய் உங்க சின்னவர் கிட்ட கேளு’ எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் சூர்யா சிவாவின் பதிவைப் பகிர்ந்து ‘மாற்றத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in