காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்: திருச்சி திமுக நிர்வாகிகள் 4 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

துரைமுருகன்
துரைமுருகன்காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்: திருச்சி திமுக நிர்வாகிகள் 4 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட திருச்சி திமுக நிர்வாகிகள் 4 பேரைகட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் எஸ்.பி.ஐ காலனியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார். முன்னதாக விழா அழைப்பிதழ் மற்றும் பேனரில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் காருக்கு கருப்பு கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எம்.பி திருச்சி சிவாவின் வீடு மற்றும் கார் மீது கல்வீசியும், கட்டைகளை கொண்டும் சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. தரப்பில் எவ்வித புகாரும் அளிக்கப்படாத நிலையில் அமைச்சர் கே.என் நேரு தரப்பில் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கருப்பு கொடி காட்டிய 11 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, திடீரென 20-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகுந்து அவர்களை தாக்கினர். தாக்குதலை தடுத்த பெண் காவலரின் கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் திருச்சி சிவா எம்.பி வீடு முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்இ காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட திருச்சி திமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணை செயலாளர் தி.முத்துச்செல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.துரைராஜ், 55-வது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்' என்று அறிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in