பெரியாறு அணை: மரம் வெட்டுவதைத் தடுத்த கேரளம்!

தோல்வியடைந்துவிட்டதா தமிழகத்தின் ராஜதந்திரம்?
பெரியாறு அணை: மரம் வெட்டுவதைத் தடுத்த கேரளம்!
பேபி அணையும் வெட்ட வேண்டிய மரங்களும்

'வாலு போயி கத்தி வந்த கதையாக...' முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தினந்தோறும் புதிது புதிதாகப் பிரச்சினைகளை ஏற்படுத்திவருகிறது கேரள அரசு. 142 அடி வரையில் தண்ணீர் தேக்க தமிழகத்துக்குச் சட்ட உரிமை இருந்தும், இரு மாநிலப் பிரச்சினையில் தனிநபர்களைக் கொண்டு வழக்குப்போட வைத்து அதற்கு முட்டுக்கட்டைப் போட்டது கேரள அரசு. விளைவாக நீர்மட்டம் 138 அடியாக இருக்கும்போதே, பெரியாறு தண்ணீர் உபரிநீராகக் கேரளத்துக்குத் திறக்கப்பட்டது.

ராஜதந்திரப் பேச்சு

இதைத் தாண்டி, ‘யார் சதி செய்தால் என்ன, இயற்கை கை கொடுப்பதால், எப்படியும் இம்மாத இறுதிக்குள் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துவிடும்’ என்று வடகிழக்குப் பருவமழையை நம்பி தமிழக அரசும், 5 மாவட்ட விவசாயிகளும் இருந்தார்கள். அதற்குள்ளாக, அடுத்த குண்டைப் போட்டிருக்கிறது கேரள அரசு. பேபி அணையைப் பலப்படுத்த வசதியாக, அங்கு வளர்ந்துள்ள 15 மரங்களை வெட்ட அம்மாநிலத் தலைமை வனப் பாதுகாவலர் கொடுத்திருந்த அனுமதிக் கடிதத்தை அம்மாநில அரசு ரத்துசெய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற கேரளத்தின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அணையைப் பலப்படுத்திவிட்டு, மீண்டும் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு. "இப்போதைக்கு 142 அடியாக உயர்த்திக்கொள்ளுங்கள். அடுத்து பேபி அணையையும் பலப்படுத்திவிட்டால், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்" என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். தீர்ப்பு வந்து 18 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், பேபி அணையைப் பலப்படுத்த தொடர்ந்து தடை மேல் தடை போடுகிறது கேரள அரசு.

அணைக்குக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசெல்கிற சாலையைச் சீரமைக்க, அம்மாநில வனத் துறை அனுமதி மறுத்தது. தொடர்ந்து 45 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாததால், பேபி அணையைச் சுற்றி வளர்ந்துவிட்ட மரங்களை அப்புறப்படுத்தவும் அனுமதி மறுத்துவந்தது. அணையைப் பார்வையிடவந்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “கேரள முதல்வர் நல்லவர், தமிழகத்தின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் அன்பு கொண்டவர், எங்கள் கோரிக்கையை ஏற்பார்” என்றெல்லாம் புகழ்ந்து ராஜதந்திர ரீதியாகக் காய் நகர்த்தியதால், மரங்களை வெட்ட அம்மாநில வனத் துறை அனுமதி வழங்கியது. இப்போது அதைத் திரும்பப்பெற்று, மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிந்தைய நிலைக்குப் பிரச்சினையைக் கொண்டுபோய்விட்டது கேரளம்.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in