`அடிப்படை கணக்கு தெரியாதவர் ஐபிஎஸ் ஆனது எப்படி?'- அண்ணாமலைக்கு டி.ஆர்.பி.ராஜா கேள்வி

`அடிப்படை கணக்கு தெரியாதவர் ஐபிஎஸ் ஆனது எப்படி?'- அண்ணாமலைக்கு டி.ஆர்.பி.ராஜா கேள்வி
டிஆர்பி ராஜாவின் டிவிட்டர் பதிவு

அடிப்படை ஜியோமெட்ரிக் கணக்கு கூட தெரியாதவர் ஐபிஎஸ் ஆனது எப்படி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினரும் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டி.ஆர்.டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினின் பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றது. நீட் விலக்கு, தமிழை ஆட்சி மொழியாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு அழுத்தம் திருத்தமாக அவர் வலியுறுத்தினார். முதல்வர் பேசும்போது பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர். அவரை தவிர மற்றவர்கள் பேசும் போது முதல்வர் பெயரை குறிப்பிட்ட போதெல்லாம் எழுச்சியான வரவேற்பு கிடைத்தது.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

இதனால் பாஜகவினர் மிகுந்த கோபத்தில் உள்ளனர். முதல்வரையும் திமுகவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "முதல்வர் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழ்நாடு முதல்வர் அரசியல் செய்துள்ளார். இது நாகரீகம் அற்ற செயல். முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறோம்.

இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், பெருமை வாய்ந்த தமிழனாகவும் முதல்வரின் பேச்சு என்னை வெட்கம் அடைய வைக்கிறது. முதல்வரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன். முதல்வரும் நானும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள் . 360 டிகிரி நாங்கள் திமுகவுக்கு எதிரிதான். ஆனால் அதற்காக முதல்வருக்கு உண்டான மரியாதையை கொடுக்காமல் இருக்க மாட்டோம்.

அவரை நாங்கள் மதிப்போம். விட்டுக்கொடுக்க மாட்டோம். ஆனால் முதல்வர் தமிழ்நாடு சரித்திரத்தில் கரும்புள்ளி ஏற்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்" என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். 360 டிகிரி, 180 டிகிரி என்பதையெல்லாம் படம் வரைந்து அதற்கு கீழ் நடிகர் சிங்கமுத்து படத்தை பதிவிட்டு அவர் கேட்பது போல கேள்வி எழுப்பியிருக்கிறார். "நேரெதிர் என்றால் அது 180 டிகிரி தான். அது எப்படி மேன் 360 டிகிரி ஆகும்? என்று டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ஜியோமெட்ரிக் தெரியாமல் ஐபிஎஸ் ஆனது எப்படி என்றும் கேள்வி எழுப்பி மீம் போட்டுள்ளார். அதோடு கோமியம் கேங் என்ற #GomiyumGang ஹேஷ்டேக்கையும் உருவாக்கி பயன்படுத்தி வருகிறார். அதில் அண்ணாமலைக்கும், பாஜகவிற்கும் எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in