தமிழக அரசு திடீர் உத்தரவு... 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் உள்ள முக்கிய துறைகளில் பொறுப்பு வகித்து வந்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், ‘’கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் செயலாளராகவும், விழிப்பு பணி ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கோபால் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் சோபனா எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி கவிதா ராமு தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது.