மின்சார சட்டத்திருத்த மசோதாவால் தமிழக விவசாயிகளின் நிலை: மக்களவையில் கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் தமிழக விவசாயிகளின் நிலை: மக்களவையில் கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மின்துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களவையில் இம்மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா குறித்து திமுக நாடளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், “35 ஆண்டுகளுக்கு முன்னதாக, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த புதிய சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், இந்த விவசாயிகளின் நிலை என்னவாகும் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தியும் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன் பின்னர் இம்மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in