‘பாசிச சக்திகளுக்கு சவால் விடும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணைவேன்’ - மெகபூபா முப்தி உறுதி

‘பாசிச சக்திகளுக்கு சவால் விடும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணைவேன்’ - மெகபூபா முப்தி உறுதி

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை அடுத்த மாதம் ஜம்மு காஷ்மீரை அடையும் போது, அதில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “காஷ்மீரில் நடைபெறவுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு இன்று எனக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் விடாபிடியான தைரியத்திற்கு வணக்கம் செலுத்துங்கள். இப்போது பாசிச சக்திகளுக்கு சவால் விடும் துணிச்சல் உள்ள ஒருவருடன் நிற்பது எனது கடமை என்று நான் நம்புகிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய அவரது நடைப்பயணத்தில் அவருடன் இணைந்து கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 20-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு செல்லும். மக்களை சென்றடையும் காங்கிரஸ் கட்சியின் இந்த யாத்திரை தமிழ்நாட்டில் தொடங்கி இதுவரை பல மாநிலங்கள் வழியாக டெல்லியை அடைந்துள்ளது. தற்போது அந்த யாத்திரைக்கு சில நாட்கள் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களும் இணைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in