நாளை தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல்!

நாளை தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல்!

நாளை ஆகஸ்ட் 14 ம் தேதி, தமிழகம் முழுவதும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்க்கரைப் பொங்கல்
சர்க்கரைப் பொங்கல்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த தினம் ஆண்டு தோறும் ஜூன் 3 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு விழா திமுக மற்றும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு இந்த ஆண்டு ஜூன் 3-ல் கருணாநிதி பிறந்த தினத்தன்று இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாட்களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதைப் போல் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படாததால் இனிப்புப் பொங்கல் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று  கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகளில் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in