ப்ளீஸ்... வதந்திகளை நம்பாதீர்கள்... விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை... ரசிகர்களுடன் நாளை சந்திப்பு!

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை தனது பிறந்தநாளை தொண்டர்கள் முன்னிலையில் கொண்டாட உள்ளார். இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

2005-ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் விஜயகாந்த் பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைப்பிடித்து வருகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை 'இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் விஜயகாந்த் வழியை பின்பற்றி செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே விஜயகாந்த்தின் குறிக்கோள்.

இயக்குநர் எஸ்.எ.சந்திரசேகருடன் விஜயகாந்த்
இயக்குநர் எஸ்.எ.சந்திரசேகருடன் விஜயகாந்த்

இந்தநிலையில் பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில்," என்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் நாளை (25.08.2023) காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னைச் சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த் அறிவிப்பால் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் குஷியில் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்தை பார்க்க இருப்பதால் சென்னைக்கு தொண்டர்கள் வர ஆயத்தமாகி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in